பிரதி சபாநாயகர் தெரிவு அரசாங்கத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறியவர்களின் நாடகத்தை அம்பலப்படுத்தியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ருவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில் “பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்மொழியப்பட்டுள்ள ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஏனைய சிலர் அரசாங்கத்திலிருந்து விலகிவிட்டதாக அண்மைய நாட்களில் அரங்கேற்றிய நாடகத்தை இது அம்பலப்படுத்தியுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.
Post a Comment