இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி மோட்டார் சைக்கிள்களுக்கு 2000 ரூபாவுக்கும் முச்சக்கர வண்டிகளுக்கு 3000 ரூபாவுக்கும் கார், வேன்களுக்கு அதிகபட்சமாக 8,000 ரூபாவுக்கும் உட்பட்டு எரிபொருள் விடுவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த எரிபொருள் கட்டுப்பாடு பேருந்துகள் மற்றும் லொரிகளுக்குப் பொருந்தாது.
Post a Comment