இலஞ்சம் பெற்ற பொலிஸாரை இடமாற்றம் செய்யும் இடங்களா? ஊர்காவற்றுறை, நெடுந்தீவு - Yarl Voice இலஞ்சம் பெற்ற பொலிஸாரை இடமாற்றம் செய்யும் இடங்களா? ஊர்காவற்றுறை, நெடுந்தீவு - Yarl Voice

இலஞ்சம் பெற்ற பொலிஸாரை இடமாற்றம் செய்யும் இடங்களா? ஊர்காவற்றுறை, நெடுந்தீவு




யாழில் பத்தாயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு பொலிஸ் நிலையங்களுக்கு  தண்டனை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்றுபொலீஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ். கல்வியங்காடு பகுதியில் டிப்பர் ஒன்றினை மறித்து பத்தாயிரம் ரூபா பணம் பெற்றுள்ளானர்.
 இயுதொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகே விடம் நேரடியாக முறைப்பாடு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபரையும் இலஞ்சம் பெற்ற மூன்று பொலிசாரையும் விசாரணைக்கு அழைத்த பிரதி பொலிஸ்மா அதிபர் பெற்றுக்கொண்ட பத்தாயிரம் பணத்தினை திருப்பி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கியுள்ளார்.

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பொலிஸார் மற்றும் அரச உத்தியோகத்தர்களை இடமாற்றம் செய்யும் இடங்களாக தீவகப்பகுதியை தெரிவுசெய்வதற்கு விசனம் வெளியிட்டுள்ள தீவக நலன்விரும்பிகள் இவ்வாறான செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post