2009 முள்ளிவாய்க்காலில் எங்களது உறவுகளின் இரத்தத்தை குடித்த காட்டேறிகளின் ஆட்சிக்கு 2010ல் இருந்து ஆதரவளித்து வரும் அங்கஜன் எமது வீர வரலாறு தொடர்பாக பேசலாமா?
2009 ல் எங்கள் உறவுகளின் இரத்தம் காயமுன்னர், எங்கள் உறவுகள் கம்பிவேலிக்குள் இருந்த நேரத்தில் தமிழர்களை வென்ற வீரனாக சிங்களமக்கள் மத்தியில் காணப்பட்ட மகிந்தேவை ஆதரித்து,
2010 பாராளுமன்ற தேர்தலில் மகிந்த கட்சியில் வேட்பாளராக நின்று சக வேட்பாளர்களுடன் வாக்குக்கா அடிதடியில் ஈடுபட்டு துப்பாக்கி பிரயோகம் வரை சென்ற அங்கஜன் வன்முறை தொடர்பாக எங்கள் இளைஞர்களிற்கு அறிவுரை கூற என்ன தகுதி இருக்கின்றது?
2015 ல் ஒட்டுமொத்த தமிழர்களும் கொலைகார ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வரக்கூடாது என நினைக்கையில் தனது பதவி ஆசைகளிற்காவும் தனது வியாபாரத்தை பாதுகாக்கவும் எமது மக்களிற்கு மாறாக மகிந்தாவுக்காக வாக்கு கேட்டு தமிழின துரோகியாக செயற்பட்டு மகிந்த தோல்லவியடைந்த மறுகணமே யாரை வெல்லக்கூடது என முதல் நாள் வரை செய்பட்டாரோ அவர்களுடன் தனது பதவிக்காக கட்சி மாறி அமைச்சு பதவி பெற்ற பச்சோந்தி அங்கஜன் எங்கள் இளைஞர்களிற்கு அறிவுரை கூற தகுதி இருக்கின்றதா?
மீளவும் தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்ஷ குடும்பத்திற்காக 2019ல் (2015 ல் பதவிக்காக யாரை விட்டு விலகினாரோ அவர்களுடன் மீளவும் இணைந்த பச்சோந்தி) கோத்தாபாயவுக்கா பிரச்சாரம் செய்து தமிழர் வாக்குகளை போலி வாக்குறுதிகளை கூறி பெற்றுக்கொடுக்க முயற்சி செய்த துரோகி தமிழர் வீர வரலாறு தொடர்பாக பேசலாமா?
2020 ல் வேலைவாய்ப்பு, அபிவிருத்தி என்ற கோசத்துடன் பாராளுமன்ற தேர்தலில் பரப்புரை செய்து தேசியத்திற்காக போராடும் தமிழர்களின் வாக்குகளை உடைத்து தமிழர் பேரம் பேசும் பலத்தை சிதைத்து பாராளுமன்றம் சென்று தனக்காக வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்யாது ஏமாற்றிய அங்கஜன் எங்கள் இளைஞர்களிற்கு அறிவுரை கூற தகுதி இருக்கின்றதா?
பாராளுமன்றத்தில் தனது பதவிகளை காப்பற்றுவதற்கா 20 திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து ஜனாதிபதிக்கு காட்டுமிராண்டித்தனமாக அதிகாரத்தை வழங்கி ஒட்டுமொத்த தமிழர்களையும் ஏமாற்றிய அங்கஜன் டக்ளஸ் போன்றவர்கள் வன்முறை தொடர்பாகவும் எங்களது வீர வரலாறு தொடர்பாக கதைக்க எந்த அருகதையும் இல்லை.
ச.சுகிர்தன்
முன்னாள் மாகாணசபை உறுப்பினர்
வடக்கு மாகாணம்.
Post a Comment