யாழில் இனி பங்கீட்டு அட்டைக்கு தான் எரிவாயு விநியோகம்! அரச அதிபர் - Yarl Voice யாழில் இனி பங்கீட்டு அட்டைக்கு தான் எரிவாயு விநியோகம்! அரச அதிபர் - Yarl Voice

யாழில் இனி பங்கீட்டு அட்டைக்கு தான் எரிவாயு விநியோகம்! அரச அதிபர்



எரிவாயு விநியோகம் பங்கீட்டு அட்டைக்கு பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவையாளரின் கண்காணிப்பின் அந்த அந்த பகுதி முகவர்கள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த சில தினங்களாக எரிவாயு விநியோகத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு இருந்தன. இந்நிலையில் விநியோக நடவடிக்கைகளை குழப்பம் இன்றி மேற்கொள்வதற்காக நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

இவ்வாறு சிலிண்டர் விநியோக நடவடிக்கையில் பல நடைமுறை சிக்கல்கள் உண்டு. அவை தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளோம்.

கலந்துரையாடல்களின் முடிவில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு , எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை குழப்பம் இன்றி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதனை குழப்பம் இன்றி முன்னெடுக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

சிலர் கறுப்பு சந்தைகளில் அதிக விலைக்கு எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்வதாக எமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருகின்றன.

கிடைக்கத்தக்க அளவிலான எரிவாயு சிலின்டர்களின் அடிப்டையிலே பிரதேசங்களுக்கு பங்கிட்டு வழங்க வேண்டிய சூழநிலை காணப்படகின்றது.

எரிபொருளினை பொறுத்த வரையில் நேற்றைய தினத்தில் 6600 லீற்றர் பெற்றோல் மற்றும் டீசல் 24 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதே அளவிலான எரிபொருள் இன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற நிலைமை தொடர்ந்தும் இடம்பெறாது. மேலும் பொதுமக்கள் எரிபொருளினை வாங்கி சேமித்து வைக்காமல் தேவையான அளவு மாத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும். முறையான பாவனையின் மூலம் அனைவருக்கும் எரிபொருள் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

அதே போன்று கடந்த சில நாட்களாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மண்ணெண்னை தட்டுப்பாட நிலவியது. இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது இது தொடர்பாக பேசப்பட்டு அமைச்சுக்கு தெரிவித்துள்ளோம்.

ஆகவே மண்ணெண்னையை துரிதமாக பெற்று விவசாயிகளுக்கும் மீன்பிடி தொழிலாளர்களுக்கும் முதற்கட்டமாக வழங்க தீர்மானித்துள்ளோம்.

இந்த பங்கீட்டு நடவடிக்கைக்கு அனைவரும் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அதே போன்று இந்த காலகட்டத்தில் இந்திய தமிழ்நாட்டு அரசிடமிருந்து சுமார் ஒரு மில்லியன் கிலோகிராம் அரிசி மற்றும் 7500 கிலோகிராம் பால்மா யாழ் மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது.

இதனை நாங்கள் முன்னுரிமையின் அடிப்படையிலே வறிய மக்களுக்கும் கர்ப்பிணி தாய்மாருக்கும் பகிர்ந்தளிப்பதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.

இதைவிட தீவக மீனவர்களின் கோரிக்கைக்கு இணங்க மண்ணெண்னை வழங்கியிருக்கிறார்கள் . அவை அனலைதீவு, நெடுந்தீவு மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட இருக்கின்றது என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post