முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வானது இன்று மூன்றாவது நாளாகவும் (14.05.2022) யாழ்ப்பாணம் நல்லூரில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் நல்லூரடியில் உள்ள தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவுத்தூபியின் முன்னால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள் ”தமிழினப் படுகொலை நினைவு முற்றம்” என்ற பெயரில் இன்று மூன்றாவது நாளாகவும் காட்சிப்படுத்தப்பட்டு, அங்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டுவருகின்றது.
மே 18ம் திகதி வரை தினமும் தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தின் முன்னால் மதிய வேளையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெறும்.
Post a Comment