ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால், புதிய அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்க விருப்பம் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனை உறுதிப்படுத்தினார்.
ஜனாதிபதிக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக கிரியெல்ல மேலும் உறுதியளித்தார்.
Post a Comment