மஹிந்த ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேற மாட்டார்: பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார்- நாமல் - Yarl Voice மஹிந்த ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேற மாட்டார்: பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார்- நாமல் - Yarl Voice

மஹிந்த ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேற மாட்டார்: பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார்- நாமல்



முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேற மாட்டார் என்று அவரது மகன் நாமல் ராஜபக்ஷ வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

தாங்கள் வெளியேறப் போகிறோம் என்று நிறைய வதந்திகள் உள்ளன என தெரிவித்த அவர், எனினும் நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

மஹிந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்றும், தனக்குப் பின்வருபவரைத் தெரிவு செய்வதில் தீவிரப் பங்கு வகிக்க விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் “எனது தந்தை பாதுகாப்பாக இருக்கிறார், அவர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். அவர் குடும்பத்துடன் தொடர்புகொள்கிறார்” என்றும் நாமல் கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post