வெண்கரம் அமைப்பினால் யாழ். கொட்டடியில்- தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் சிங்களம், ஆங்கில கற்கைகள் ஆரம்பம்! - Yarl Voice வெண்கரம் அமைப்பினால் யாழ். கொட்டடியில்- தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் சிங்களம், ஆங்கில கற்கைகள் ஆரம்பம்! - Yarl Voice

வெண்கரம் அமைப்பினால் யாழ். கொட்டடியில்- தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் சிங்களம், ஆங்கில கற்கைகள் ஆரம்பம்!



வெண்கரம் அமைப்பின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டின் முன்னோக்கிய பாய்ச்சலாக யாழ்ப்பாணம் கொட்டடியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அட்சய திருதியை தினமான இன்று (03) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு வெண்கரம் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகன் தலைமையில் இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. கொட்டடி லைடன் சந்தியில் உள்ள கட்டிடம் ஒன்றில் மிக எளிமையான முறையில் ஆரம்ப வைபவம் இடம்பெற்றது.

வலிகாமம் கல்வி வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகரும் வெண்கரம் தலைமைச் செயற்பாட்டாளர்களில் ஒருவருமாகிய திருமதி சுகுணா சண்முகேந்திரன் மற்றும் விருந்தினர்கள் இணைந்து இக்கற்கைநெறிக் கூடத்தை திறந்து வைத்தனர்.  

பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மாணவர்களை கல்வியில் மேல்நிலை அடையச் செய்வதன் மூலம் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டுவரும் வெண்கரம் அமைப்பு, இன்று தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இரண்டாம் மொழியை விருத்தி செய்யும் செயற்பாட்டை நோக்கி வளர்ந்துள்ளமையை பலரும் பாராட்டியுள்ளனர்.

மேற்படி கற்கை நெறிகள் ஆரம்ப நிகழ்வில் கொட்டடி நமசிவாய வித்தியாலய அதிபர் ஜி.சிவநேசன், யாழ்.ஊடக அமையத்தின் ஸ்தாபகர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.தயாபரன், மேற்படி வித்தியாலய ஓய்வுநிலை பிரதி அதிபர் திருமதி பத்மமலர் சிவகடாட்சம், வித்தியாலய ஆசிரியர் ஜஸ்ரின் அன்ரனி, கொட்டடி முத்தமிழ் சனசமூக நிலையத் தலைவர் சி.ஜெபநேசன், வெண்கரம் செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post