யாழில் கடந்த ஒரு வருட காலத்தில் 6 வீடுகளில் களவில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் , நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது , கடந்த 2021ஆம் ஆண்டு மற்றும் 2022ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட கால பகுதியில் 6 வீடுகளில் தான் தங்க நகைகள் , பணம் என்பவற்றை களவாடியதாக தெரிவித்துள்ளார்..
சந்தேக நபரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஒரு தொகை நகை மற்றும் பணம் என்பவற்றை மீட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment