யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளத்தினரால் இந்திய துணை தூதரகத்திடம் விடுத்த கோரிக்கைக்கிணங்க
அக்கறையுடனும் அன்புடனும் அக்கறையுடனும் இந்தியாவிடமிருந்து வடக்கு மாகாண மக்களுக்கான அட்சயபாத்திரா உதவிகள்2022எனும் இந்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ்
இந்திய அரசாங்கத்தினால் கடல் கடந்த தீவு பகுதி மீனவர்களுக்கு இந்திய அரசின் நன்கொடையாக இலவசமாக வழங்குவதற்கான வழங்கவென அனுப்பி வைக்கப்பட்டுள்ள 15ஆயிரம் லீற்றர் மண்ணெண்னையினை மீனவர்களுக்கு வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது
ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் மஞ்சுளா தலைமையில் இடம்பெற்ற மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் இந்திய துணைத்தூதுவர் ,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட
எழுவை தீவு 148 மீனவர்களுக்கும் ஒவ்வொருவருக்கும் 20 லீற்றர் மானிய அடிப்படையில் இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment