இந்த வாரத்திற்குள் புதிய அரசாங்கம் – ஜனாதிபதியின் விசேட உரை! - Yarl Voice இந்த வாரத்திற்குள் புதிய அரசாங்கம் – ஜனாதிபதியின் விசேட உரை! - Yarl Voice

இந்த வாரத்திற்குள் புதிய அரசாங்கம் – ஜனாதிபதியின் விசேட உரை!




நாட்டில் தற்போது தடைப்பட்டுள்ள  ஆட்சி முறை செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கு  இந்த வாரத்திற்குள் புதியதொரு அரசாங்கத்தை ஸ்தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலே இந்த விடயத்தை தெரிவித்தார்

அத்துடன், நாடாளுமன்றில் பெரும்பான்மையோரின் நம்பிக்கையை வென்ற மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தக் கூடிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்ன நாடாளுமன்றுக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில்  19 ஆவது திருத்தம் உள்ளடக்கப்பட்டு அரசியல் திருத்தம் மேற்கொள்ளப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தில் பிரமருக்கு புதிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு  சந்தர்ப்பம்  வழங்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், நிறைவேற்று அதிகாரமுடை ஜனாதிபதி முறைமை தொடர்பில் அனைவடனும் இணைந்து  தீர்மானம் மேற்கொள்ளப்படுமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மேலும் தெரிவித்தார். 


0/Post a Comment/Comments

Previous Post Next Post