பொன்னாலையை சேர்ந்த செல்வி சங்கீதா ஈஸ்வரன் யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆசிரியப் பயிற்சியை முடித்து வெளியேறி வவுனியா ரம்பைக்குளம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாக நியமனம் பெற்றுள்ளார்.
சிறு வயதில், இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் தந்தையை இழந்த சங்கீதா தாயின் அரவணைப்பில் கல்வியைத் தொடர்ந்தார். தாயார் கோழி வளர்ப்பு, பலகாரம் செய்து விற்றல் போன்ற குடிசைக் கைத்தொழிலை மேற்கொண்டு சங்கீதா உட்பட ஐந்து பிள்ளைகளையும் கற்பித்தார்.
தான் சட்டத்தரணியாக வரவேண்டும் என்ற நோக்கோடு கல்வி கற்ற சங்கீதா அதற்காக சந்தர்ப்பம் கிடைக்காமல் போகவே, கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரிக்கு தெரிவுசெய்யப்பட்டு இன்று ஆசிரியையாக வெளியேறியுள்ளார்.
இவரது அடுத்த சகோதரி கொழும்பு ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருகின்றார். இரண்டாவது சகோதரி மட்டக்களப்பு விபுலானந்தா நுண்கலைக் கல்லூரிக்கு தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார். மூன்றாவது சகோதரி க.பொ.த உயர்தரம் கடைசி சகோதரன் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றனர்.
தாயார் அன்பே சிவம் உற்பத்திகள் என்ற பெயரில் பலகாரம் மற்றும் இதர பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றார்.
Post a Comment