இந்தியா சென்ற வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா நேற்றைய தினம் புதன்கிழமை ஆந்திரா மற்றும் தெலுங்கானா தொழில்நுட்ப வல்லுனர்களை தமிழ்நாட்டில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது வடக்கு அபிவிருத்தியை முன்னோக்கி நகர்த்திச் செல்வதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பிலும் அனுபவங்களை பகிர்வது தொடர்பில் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார்.
வடக்கில் இறால் வளர்ப்பு, மீன்பிடி பண்ணைப் பொருளாதாரம், ரயில்வே, மீள் புதுப்பிக்க சக்தித்திட்டம் மற்றும் நிதி பெறும் முறைமை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தில் முட்டை உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் கோழிப் பண்ணையாளர்கள் ஊக்குவித்தல் தொடர்பில் ஆளுநர் தனது கருத்துக்களை முன்வைத்ததுடன் போக்குவரத்துத் துறைகளான கப்பல் சேவை மற்றும் விமானப் போக்குவரத்து தொடர்பில் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்
Post a Comment