பிரதமர் அலுவலகத்தின் பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ஷ தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதமர் பணிக்குழாம் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை மன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யோஷித்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான காணி என்று பத்திர எண் மற்றும் காணியின் பெயர் என்பவற்றை முன்வைத்து மக்கள் விடுதலை முன்னணி தலைவர் வெளியிட்ட கருத்துகள் உண்மைக்கு புறம்பானதும், மக்களை திசை திருப்பும் வகையிலான கருத்துகள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment