அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் நாளை திங்கட்கிழமை முதல் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் கூட்டணி தீர்மானித்துள்ளது.
நாளை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரையில் இந்தப் போராட்டம் நடக்கும் என்று தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இதன்போது நாடு முழுவதும் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 11 ஆம் திகதி தொழிற்சங்கங்களின் கூட்டணியின் மாநாட்டை நடத்தி அரசாங்கத்திற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment