யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தில் 2020 ஃ 2021 ஆம் கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தும் நிகழ்வுகள் நாளை 01 ஆம் திகதி புதன்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன.
திசைமுகப்படுத்தல் நிகழ்வுகளின் அறிமுக நிகழ்வு நாளை 01 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு முகாமைத்துவகற்கைகள் வணிக பீட சபா மண்டபத்தில், பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

2020 ஃ 2021 ஆம் கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும், பெற்றோரும் நிகழ் நிலையூடாக இந் நிகழ்வில் கலந்து கொள்ள முடியும்.
நிகழ்வுக்கான இணைப்புகள் புதுமுக மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல், மற்றும் கைத் தொலைபேசிக் குறுந் தகவல்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், இணைப்புகள் கிடைக்காதவர்கள் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி அலுவலகத்தின் 021 222 3610 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் அறிவித்துள்ளார்.
Post a Comment