கஞ்சாவைக் கைப்பற்றி பொலிஸாரிடம் ஒப்படைப்பு! -சந்தேக நபர் தப்பியோட்டம் - Yarl Voice கஞ்சாவைக் கைப்பற்றி பொலிஸாரிடம் ஒப்படைப்பு! -சந்தேக நபர் தப்பியோட்டம் - Yarl Voice

கஞ்சாவைக் கைப்பற்றி பொலிஸாரிடம் ஒப்படைப்பு! -சந்தேக நபர் தப்பியோட்டம்



பொன்னாலை ஊடாக காரைநகருக்கு கஞ்சா கொண்டு சென்றவரை மடக்கிப் பிடித்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றபோது குறித்த நபர் கஞ்சாவையும் கைத்தொலைபேசியையும் கைவிட்டுத் தப்பிச் சென்றார். 

இச்சம்பவம் இன்று (04) புதன்கிழமை மாலை இடம்பெற்றது. 

குறித்த நபர் கஞ்சா கொண்டு செல்கின்றார் என பொன்னாலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவரை வழிமறித்த இளைஞர் விசாரணை நடத்தினார். இதன்போது அவரிடம் கஞ்சா இருந்தமை கண்டறியப்பட்டது. 

அவரை வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காக கொண்டுசென்றபோது திடீரென்று அவர் காரைநகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார். 

இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்திருந்தோம். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரிடம் கஞ்சாவும் கைத்தொலைபேசியும் எம்மால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

கைத்தொலைபேசியை வைத்து குறித்த நபரைக் கைது செய்வதற்காக நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 

இதேவேளை, பொன்னாலை கரையோர வீதியூடாக கஞ்சா பரிமாற்றம் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளமையால் சந்தேக நபர்களை மடக்கிப் பிடிப்பதற்கு எமது பிரதேச இளைஞர்கள் தொடர்ந்தும் விழிப்புடன் செயற்பட்டு வருகின்றனர் என்பது இங்கு குறி;ப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post