யாழ் கோம்பயன்மணல் இந்துமயானம் புனரமைத்து திறந்து வைப்பு!! - Yarl Voice யாழ் கோம்பயன்மணல் இந்துமயானம் புனரமைத்து திறந்து வைப்பு!! - Yarl Voice

யாழ் கோம்பயன்மணல் இந்துமயானம் புனரமைத்து திறந்து வைப்பு!!



யாழ் மாநகர சபையினதும் வண்ணை கோம்பயன்மணல் இந்து மயான பரிபாலசபையினதும் மற்றும் நன்கொடையாளர்களின் நிதிப்பங்களிப்புடன் புதுப் பொலிவு பெற்ற யாழ்.கோம்பயன் மணல் இந்து மயானத்தின் நுழைவாயில், ஆலயக் கட்டடம், இரண்டு தகனமேடை, காவலாளி அறை என்பன இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டது.

இன்று சனிக்கிழமை(4) முற்பகல் 11.30 மணியளவில் யாழ்.மாநகரசபையின் ஆணையாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன், வண்ணை கோம்பயன்மணல் இந்து மயான பரிபாலசபையினர், நன்கொடையாளர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

கோம்பயன் மணல் இந்து மயானத்தின் நுழைவாயில், ஆலயக் கட்டடம், தகனமேடை, காவலாளி அறை என்பனவும் விருந்தினர்களால் திறந்துவைக்கப்பட்டது

0/Post a Comment/Comments

Previous Post Next Post