யாழில் சிங்கள கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார் அமைச்சர் விஜயதாச!! - Yarl Voice யாழில் சிங்கள கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார் அமைச்சர் விஜயதாச!! - Yarl Voice

யாழில் சிங்கள கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார் அமைச்சர் விஜயதாச!!



நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இரண்டாம் மொழி சிங்கள கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

யாழ்ப்பாணம் இந்து பௌத்த கலாசார பேரவையில் இடம்பெற்ற நிகழ்வில் குறித்த சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய விஜயதாச ராஜபக்ச இரண்டாம் மொழி கல்வியின் அவசியம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தெரிந்திருப்பது அவசியம் மற்றும் இனங்களுக்கு இடையில் பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்துவதற்காக மொழிகள் அவசியமாகின்றன ஆகிய கருத்துகளை முன்வைத்தார்.

குறித்த இரண்டாம் மொழி கற்கை நெறி நிலையத்தின் இயக்குனர் இராமச்சந்திரன் உரையாற்றும்போது தற்போது நாட்டில் உள்ள நேர்மையான புத்திஜீவிகளில் ஒருவர் விஜயதாச ராஜபக்ச எனவும் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு தற்போது நாட்டில் இருக்கும் பொருத்தமானவர் இவர்தான் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், 52 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மற்றும் உதவி அரசாங்க அதிபர் அதிகாரிகள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post