வடக்கு பாடசாலைகள் தொடர்பில் புதிய தீர்மானங்கள் நிறைவேற்றம்! - Yarl Voice வடக்கு பாடசாலைகள் தொடர்பில் புதிய தீர்மானங்கள் நிறைவேற்றம்! - Yarl Voice

வடக்கு பாடசாலைகள் தொடர்பில் புதிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!




வடக்கு பாடசாலைகள் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றி செயற்படுத்த முடியும்.. கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு.


வட மாகாண பாடசாலைகளை தொடர்ந்து நாடாத்திச் செல்வது தொடர்பில் வட மாகாண ஆளுநருடன் கலந்துரையாடி  தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் தெரிவித்தார்.


அந்த வகையில் கடந்த 28 ஆம் திகதி ஆளுநருடன் கலந்துரையாடி பின் தீர்மானங்களாக 
நடத்தக்கூடிய கிராமப்புற பாடசாலைகளை வருகை தரக்கூடிய குறைந்தபட்ச ஆசிரியர்களைக் கொண்டு தொடர்ந்து நடாத்துதல்.

 ஏனைய அனைத்துப் பாடசாலைகளிலும் இவ்வாண்டு கபொத சா/ த மற்றும் கபொத உ/த பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான வகுப்புக்களை சமூகமளிக்கக் கூடிய ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் நடாத்துதல்.

 இவ்விடயம் தொடர்பில் பாடசாலை தமது வலயக்கல்விப் பணிப்பாளருடன் கலந்துரையாடி பொருத்தமான முடிவுகளை எடுக்கலாம்.

ஆகவே மாணவர்களின் கல்விக்காக தம்மால் இயன்றளவு ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் தன்னார்வமாக வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post