கதாநாயகனாக நடித்து வரும் விஜய் சேதுபதி, வில்லன் வேடங்களிலும் முத்திரை பதித்து வருகிறார்.
அந்த வரிசையில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் நடித்துள்ளார். அடுத்து வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ வெளியாக இருக்கிறது. தெலுங்கில் ’உப்பெனா’ படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, கால்ஷீட் பிரச்சினையால் ’புஷ்பா’ படத்தில் நடிக்க இயலாமல் போனது.
இந்தியில் ‘மும்பைக்கர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்து மெர்ரி கிறிஸ்துமஸ், காந்தி டாக்ஸ் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரபல தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபுவுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
த்ரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. இதில் ஹீரோவுக்கு இணையான வில்லன் வேடத்தில் நடிக்க, விஜய் சேதுபதியிடம் படக்குழுவினர் பேசி வருகின்றனர்.
Post a Comment