காலிமுகத்திடலில் கோட்டாகோகம போராட்டத்தை பாதுகாப்போம் எனக் கூறிய பிரதமர் இன்று அதனை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரென மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
சமகாலநிலைமை தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், ரணில் விக்ரமசிங்க பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வரவில்லை
பிரச்சினையை வளர்ப்பதற்காகவே வந்துள்ளார்.வரிசை யுகமே தற்போது காணப்படுகிறது. உரம் இல்லாததால் விவசாயத்துறை முழுமையாக
செயலிழந்துள்ளது.
பொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாக தட்டுப்பாட்டினாலும் மக்கள் பட்டினிச் சாவினை எதிர்கொள்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் கோட்டாகோகம போராட்டத்தை பாதுகாப்போம் எனக் கூறிய பிரதமர் இன்று அதனை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரச்சினையைத் தீர்க்க முடியாத உணர்ச்சியற்ற ஜடங்களாக உள்ள கோட்டாபய அரசாங்கத்தை விரட்டியடிக்க இலங்கையில் உள்ள மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றார்.
Post a Comment