யாழில் பங்கீட்டு அட்டைக்கு எரிபொருள் விநியோகம் தொடர்பில் அரச அதிபர் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice யாழில் பங்கீட்டு அட்டைக்கு எரிபொருள் விநியோகம் தொடர்பில் அரச அதிபர் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice

யாழில் பங்கீட்டு அட்டைக்கு எரிபொருள் விநியோகம் தொடர்பில் அரச அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்



யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் வாரத்திலிருந்து பங்கீட்டு அடிப்படையில் எரிபொருளை விநியோகிப்பதற்காக  அமுல்படுத்தப்படவுள்ள  பொது மக்களுக்கான எரிபொருள் பங்கீட்டு அட்டை பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

அரச திணைக்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் பங்கீட்டு அட்டை அவ்அவ் திணைக்களத் தலைவர்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

இதுவரை இவ் எரிபொருளுக்கான பங்கீட்டு விநியோக அட்டையை பெற்றுக்கொள்ளாத அரச திணைக்களங்கள் யாழ்ப்பாண மாவட்டச்செயலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post