கோட்டா கோகமவிலிருந்து யாழ் பொதுநூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு!! நூலகம் எரிக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தனர் - Yarl Voice கோட்டா கோகமவிலிருந்து யாழ் பொதுநூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு!! நூலகம் எரிக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தனர் - Yarl Voice

கோட்டா கோகமவிலிருந்து யாழ் பொதுநூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு!! நூலகம் எரிக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தனர்



கோட்டாகோகம நூலகத்தில் இருந்து யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு இன்றைய தினம் நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

யாழ் பொதுசன நூலகத்துக்கு
மதியம் ஒரு மணியளவில் வந்த கோட்டாகம போராட்டக்குழுவினர் ஒரு தொகுதி நூல்களை யாழ்ப்பாண பொதுசன நூலக நிர்வாகத்தினரிடம் கையளித்தனர்.

அத்துடன் யாழ் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டமையை நினைவு கூறும் வகையில் நூலக வாயிலில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு கூரலில் ஈடுபட்டனர்.

கோட்டாகம போராட்டக்குழுவினர்
யாழ் பொதுசன நூலகத்திற்கும் மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்திற்கும் கிளிநொச்சியில் இருக்கின்ற மாணவர்களுக்கும் நூல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post