"எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடத்தப்படவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க 140 இற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றிவாகை சூடுவார்."
- இவ்வாறு முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"நான் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் என்ற ரீதியில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றேன்.
எனவே, தற்போதைய பதில் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க அதிக வாக்குகளைப் பெற்று புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதுடன், அனைவரினதும் ஆசீர்வாதத்துடன் பதவியேற்பார்.
அவர் இறுதித் தருணத்தில் எவ்வித வாத விவாதங்களும் இல்லாமல் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படலாம்.
ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் இலங்கையை ஆசியாவின் அதிசிறந்த நாடாக மாற்றுவார். உலக நாடுகளில் இலங்கையைச் சிறந்த நாடாகவும் மாற்றுவார்.
ஏனெனில் அரசியலில் 50 வருட அனுபவம் உள்ள தலைவரே ரணில். அவர் மீது எவ்வித அவநம்பிக்கையும் பீதியும் கொள்ளக்கூடாது" - என்றார்.
Post a Comment