சர்வக்கட்சி அரசமைப்பதில் ரணில் தீவிரம்! 25 அமைச்சர்களை நியமிக்க உத்தேசம் - பிரதமர் பதவிக்கு சிலரின் பெயர்கள் முன்மொழிவு!! - Yarl Voice சர்வக்கட்சி அரசமைப்பதில் ரணில் தீவிரம்! 25 அமைச்சர்களை நியமிக்க உத்தேசம் - பிரதமர் பதவிக்கு சிலரின் பெயர்கள் முன்மொழிவு!! - Yarl Voice

சர்வக்கட்சி அரசமைப்பதில் ரணில் தீவிரம்! 25 அமைச்சர்களை நியமிக்க உத்தேசம் - பிரதமர் பதவிக்கு சிலரின் பெயர்கள் முன்மொழிவு!!



ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் 20 முதல் 25 வரையான அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. 

இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தொழில்சார் நிபுணர்களுக்கும் அமைச்சரவையில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.  

பிரதமர் பதவிக்கு தினேஷ் குணவர்தனவின் பெயரை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பரிந்துரைத்துள்ளது.  

எனினும், அனைத்து கட்சிகளின் பங்களிப்புடன் சர்வக்கட்சி அரசொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி முயற்சித்துவருவதால் பிரதமர் பதவி குறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. 
சம்பிக்க ரணவக்கவின் பெயரும் பரிந்துரையில் உள்ளது. 

அத்துடன், பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு பிரதமர் பதவியை வழங்கினால், போராட்டக்காரர்களை ஓரளவுக் கட்டுப்படுத்த முடியும் என்ற யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.  

புதிய அமைச்சரவையில் ஈபிடிபி, இ.தொ.கா. என்பவற்றுக்கு அமைச்சு பதவிகள் உறுதியாகியுள்ளன. ஜனாதிபதி இன்று பதவியேற்ற பிறகு, அடுத்தக்கட்ட நகர்வுகள் தீவிரமாக இடம்பெறும்.  

அதேவேளை, ஆளுநர் பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறவுள்ள அதேவேளை, வெளிவிவகாரத்துறை மற்றும் பாதுகாப்பு துறையிலும் சில மறுசீரமைப்புகள் செய்யப்படவுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post