ஏ9 வீதியை மறித்து யாழில் மக்கள் போராட்டம்!! பாதை தடைப்பட்டதால் அவதி!! - Yarl Voice ஏ9 வீதியை மறித்து யாழில் மக்கள் போராட்டம்!! பாதை தடைப்பட்டதால் அவதி!! - Yarl Voice

ஏ9 வீதியை மறித்து யாழில் மக்கள் போராட்டம்!! பாதை தடைப்பட்டதால் அவதி!!



எரிபொருள் வழங்க கோரி ஏ9 வீதியை வழிமறித்து யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களாக எரிபொருளுக்காக காத்திருந்தவர்களே ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

இணைய வழியில் பதிவு செய்பவர்களுக்கே எரிபொருள் வழங்கப்படும் என மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தெரிவித்ததால் அங்கு நீண்ட நாட்களாக காத்திருந்த பொது மக்களே வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஏ9 வீதி வழியான போராட்ட போக்குவரத்து தற்போது தற்காலிகமாக தடைப்பட்டு உள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post