காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்றோ நாளையோ எரிபொருள் வரக்கூடிய சாத்தியப்பாடு இல்லாத காரணத்தால் வரிசையில் காத்திருக்கும் மக்களை வீடு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
காரைநகர் - வலந்தலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் வரும் என கதை பரவியதை அடுத்து பல நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கரவண்டிகளும் இன்று காலை முதல் அங்கு வரிசையில் நிற்கின்றன. மேலும் புதிதாகவும் வாகனங்கள் கொண்டுவந்து அடுக்ப்படுகின்றன.
இந்நிலையில், எரிபொருள் வராத காரணத்தால் இன்றோ நாளையோ எரிபொருள் விநியோகம் சாத்தியமில்லை என எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகம், பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை என்பன அறிவித்துள்ளன.
எரிபொருள் வருகைதந்த பின்னர் பிரதேச செயலகங்களால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைக்கு மாத்திரமே விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைநகர், சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அந்தந்த பிரதேச செயலகங்களால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டை உடையவர்களுக்கு மாத்திரமே காரைநகரில் எரிபொருள் விநியோகிக்கப்படும்.
மேலும, இவ்விநியோகம் தொடர்பாக 18 மணித்தியாலங்களுக்கு முன்னர் சமூக ஊடகங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய விளம்பரப் பலகை மூலம் மக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment