இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இன்றைய சவாலான காலங்களில், பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கும், ஜனநாயகம் மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநிறுத்துவதற்கும், இலங்கையர்களுக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவது அவசியமாகும் என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கையின் புதிய அரசுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.
அமைதியான போராட்டத்துக்கான உரிமை உட்பட ஜனநாயகமானதும் அனைவரையும் உள்ளடக்கியதுமான ஆட்சியைப் பாதுகாக்க அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்துகின்றோம் என்று இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹூல்டன் தெரிவித்துள்ளார்.
Post a Comment