யாழிற்கும் - கிளிநொச்சிக்கும் இடையே யாழ்ராணி என்ற விசேட ரயில் சேவை இன்று ஆரம்பம்!! - Yarl Voice யாழிற்கும் - கிளிநொச்சிக்கும் இடையே யாழ்ராணி என்ற விசேட ரயில் சேவை இன்று ஆரம்பம்!! - Yarl Voice

யாழிற்கும் - கிளிநொச்சிக்கும் இடையே யாழ்ராணி என்ற விசேட ரயில் சேவை இன்று ஆரம்பம்!!



யாழ்ப்பாணத்துக்கும்-கிளிநொச்சிக்கும் இடையே யாழ்ராணி  என்ற விசேட ரயில்  சேவை இன்று (11) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
  
அரச பணியாளர்கள் மற்றும் அறிவியல்நகர் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்களுக்கு வசதியாக இச்சேவையை ரயில் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி  யாழ்.ராணியின்  ரயில் சேவை 6 காலை மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் ரயில் 6.40க்கு யாழ் புகையிரத நிலையத்திலிருந்தும், 7 மணிக்கு சாவகச்சேரியிலிருந்தும், 7.12க்கு கொடிகாமத்திலிருந்தும் புறப்பட்டு பளையை 7.30க்கும், கிளிநொச்சியை 7.56க்கும், அறிவியல்நகர் புகையிரதநிலையத்தை 8.05க்கும் வந்தடைந்து 8.11க்கு முறிகண்டியை அடையும். 

 காங்கேசன்துறைக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையில், மாவிட்டபுரத்திலிருந்து 6.05க்கும், தெல்லிப்பழையிலிருந்து 6.09க்கும், மல்லாகத்திலிருந்து 6.14க்கும், சுன்னாகத்திலிருந்து 6.18, இணுவிலிருந்து 6.22க்கும், கோண்டாவிலிருந்து 6.27க்கும், கொக்குவிலிருந்து 6.31க்கும் புறப்பட்டு 6.35க்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடையும்.
யாழ்ப்பாணத்துக்கும், கிளிநொச்சிக்கும் இடையே, புங்கன்குளம் 6.44, நாவற்குழி 6.50, தனங்கிளப்பு 6.54, சாவகச்சேரி 7.00,
சங்கத்தானை 7.03, மீசாலை 7.07, கொடிகாமம் 7.12, மிருசுவில் 7.14, எழுதுமட்டுவாழ் 7.21க்கு புறப்பட்டு பளையை 7.30க்கு வந்தடையும். அங்கிருந்து ஆனையிறவு 7.42, பரந்தன் 7.50க்கு வந்தடைந்து கிளிநொச்சிக்கு 7.56க்கு வந்தடையும்.

இந்த மீண்டும், காலை 10 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும்  பளையிலிருந்து 10.31க்கும், கொடிகாமத்திலிருந்து 10.48க்கும், சாவகச்சேரியிலிருந்து 11 மணிக்கும் புறப்பட்டு 11.20க்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்.

பிற்பகல் 2 மணிக்கு மறுபடியும் 
காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் இந்தப் ரயில், யாழ்ப்பாணத்திலிருந்து 2.39க்கும், சாவகச்சேரியிலிருந்து 2.59க்கும், கொடிகாமத்திலிருந்து 3.11க்கும் புறப்பட்டு, பளையை 3.38க்கும், கிளிநொச்சியை 3.56க்கும் வந்தடைந்து, முறிகண்டியை 4.10க்கு வந்தடையும்.

மீண்டும் முறிகண்டியிலிருந்து 4.40க்கு புறப்படும் இந்தப் புகையிரதம் அறிவியல்நகரை 4.46க்கு வந்தடைந்து, கிளிநொச்சியிலிருந்து 5 மணிக்கு புறப்பட்டு, பரந்தனிலிருந்து 5.06க்கும், ஆனையிறவிலிருந்து 5.14க்கும் பளையிலிருந்து 5.30க்கும் புறப்பட்டு 6.44க்கு யாழ்ப்பாணம் வந்தடைந்து 7.20க்கு காங்கேசன்துறையை சென்றடையும். 

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு ஒரு வழிக் கட்டணமாக 90 ரூபாய் கட்டணமும் யாழ்ப்பாணத்திலிருந்து பளைக்கு 60 ரூபாயும் யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமத்துக்கு 35 ரூபாயும் கட்டணம் அறவிடப்படும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post