நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பின்போது டலஸ் அழகப்பெருமவை ஆதரித்து வாக்களிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் அதன் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இன்றிரவு நடைபெற்றது.
கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ், வேட்பாளர் டலஸ் அழகப்பெரும மற்றும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டு கூட்டமைப்பினருக்கு வழங்கிய உறுதிமொழியையடுத்தே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.
Post a Comment