"இலங்கையின் சட்டத்தில் 'பொலிஸ் ஊரடங்கு' என்று எதுவுமே கிடையாது. இது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராகக் கொழும்பில் நாளை நடைபெறவுள்ள மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தடுப்பதற்காகச் செய்யப்பட்டுள்ள சட்டவிரோத அறிவிப்பு ஆகும்."
- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் பொலிஸ் பிரிவுகள் பலவற்றில் இன்றிரவு முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் என்ற அறிவிப்பை பொலிஸ்மா அதிபர் ஊடாக அரசு விடுத்துள்ளது.
இது அரசுக்கு எதிராகக் கொழும்பில் நாளை நடைபெறவுள்ள மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தடுப்பதற்காக அதாவது போராட்டத்துக்கு மக்களை வராமல் தடுப்பதற்காகச் செய்யப்பட்டுள்ள சட்டவிரோத அறிவிப்பு ஆகும்.
ஏனெனில், 'பொலிஸ் ஊரடங்கு' என்று இலங்கையின் சட்டத்தில் எதுவுமே கிடையாது" - என்றார்.
Post a Comment