குருநகர் கடற்றொழிலாளர் சங்கத்தினர் எரிபொருள் பெற்றுத்தரக்கோரி யாழ் மாவட்ட செயலாளரிடம் மகஜரை கையளித்தனர்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடற்றொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகஜரினைப் பெற்ற மாவட்ட செயலாளர் எதிர்வரும் நாட்களில் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Post a Comment