" இலங்கையை கட்டியெழுப்ப முடியும். அதற்கு பல வருடங்கள் தேவையில்லை. அடுத்த வருடம் சிறந்த நிலையில் இருப்போம். " இவ்வாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்தே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
நாட்டை மீட்டெடுப்பதற்காக அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஒன்றிணைந்து பயணிப்போம். அதற்காகவே சர்வக்கட்சி அரசை ஸ்தாபிக்க பாடுபடுகின்றேன்.
19 ஆவது திருத்தச்சட்டம் மீள அமுல்படுத்தப்படும். அதன் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை பற்றி கலந்துரையாடலாம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை இழுத்தடிக்க முடியாது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். விசாரணை அறிக்கைகள் உள்ளன. அவை மீளாய்வுக்குட்படுத்தப்படும் . இங்கிலாந்து பொலிஸாரின் உதவி பெறப்படும்.
பாசிசவாதத்துக்கு இடமில்லை. சட்டம், ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை.
முறைமை மாற்றம் பற்றி அமைதியாக போராடும், போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர். அதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.
எனவும் பதில் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
Post a Comment