வடமாகாணத்தில் உள்ள யாழ் மாநகர சபை, கரைச்சி பிரதேச சபை , வவுனியா நகர சபையை சேர்ந்த தீயணைப்பு படை வீரர்களுக்கான ஆளுமை திறன் மேம்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கு UNDP நிறுவனத்தினால் கடந்த 5 நாட்களாக யாழ் மாநகர சபை மற்றும் யாழ் நூலகத்தில் நடைபெற்றது.இதில் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற வீரர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில் யாழ் மாநகர சபை ஆணையாளர், பிரதி ஆணையாளர் மற்றும் UNDP நிறுவன அதிகாரிகள் பயிற்சி பெற்ற முன்று சபை வீரர்களும் கலந்து கொண்டனார் இவர்களுக்கான பயிற்சிகளை கொழும்பு மாநகர சபை தீயணைப்பு படை பிரிவினரால் வழங்கி வைக்கப்பட்டது அந்த அடிப்படையில் பயிற்சி வழங்கிய வீரர்கள் யாழ் மாநகர சபையினால் கௌரவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Post a Comment