இராணுவத்தின் தாக்குதலுக்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்!! கைது செய்யப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தல் - Yarl Voice இராணுவத்தின் தாக்குதலுக்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்!! கைது செய்யப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தல் - Yarl Voice

இராணுவத்தின் தாக்குதலுக்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்!! கைது செய்யப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தல்



ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் இன்றிரவு (21.07.2022) கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், அவர்கள் இருப்பிடத்தை தெரியப்படுத்த வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அந்த இடத்திற்கு வந்த இராணுவத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

அத்துடன், அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. மேலும் சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட 10 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post