அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் சுமுது பிரசண்ண அவர்களுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிராந்தியத்துக்கு இடமாற்றம்.
அவர் மீது மக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த முறைப்பாடுகளை அடுத்து இந்த இடமாற்றம் பொலிஸ் பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவி நிலையிலிருந்து தரமிறக்கப்பட்டு சூப்பர் நியூமரரி நிலை (Supernumerary position) என்ற வகையில் இடமாற்றப்பட்டுள்ளார்.
அச்சுவேலி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கர் ஒரு சிலரை வைத்து கொண்டு கையூட்டுப் பெறல், சட்டவிரோத மணல் கல் வியாபாரிகளிடமிருந்து கையூட்டு பெற்று வந்தமை , முறைப்பாடுகளை தட்டிக்கழித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பட்டு வந்த நிலையில் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய பொறுப்பதிகாரியாக காங்கேசன்துறை பொலீஸ் பிராந்தியத்தில் இருந்து ip பிரபாத் என்பவர் நியமிக்கப்படலாம்.
அத்துடன் அச்சுவேலி போலீஸ் நிலையத்தில் நீண்ட காலமாக பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களை இடம்மாற்றி புதிய உத்தியோர்களை உள்வாங்க யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் அவர்கள் மக்களுக்கு சேவையாற்றக் கூடியவர்களாக இருப்பார்கள் என மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை.
Post a Comment