யாழ்ப்பாண மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர் சங்க தலைவர் மற்றும் பிரதிநிதிகள் யாழ்மாவட்ட செயலகத்திடம் பேக்கரி உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பாக எதிர்கொண்ட இடர்பாடுகள் தொடர்பாக முன்வைத்த கோரிக்கைக்கு தீர்வாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
எனவே பேக்கரி உற்பத்தியாளர்கள் தங்களது பேக்கரி சங்கம் ஊடாக தொடர்பு கொண்டு உற்பத்தி விற்பனையை தடையின்றி மேற்கொள்ள மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment