இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ். சாலை ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்குள்ளே வெளியில் இருந்து வருகின்ற பஸ்கள் உள்நுழையாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
யாழ். சாலையின் செயற்பாடுகள் முடங்கிக் காணப்படுவதால் வெளியூரில் இருந்து வரும் பஸ்கள் தரித்து நின்று பயணிகளை ஏற்றும் செயற்பாடுகள் முடங்கிக் காணப்படுகின்றன.
இதன்காரணமாக பஸ்ஸில் பயணிப்பதற்காக வந்த பொதுமக்கள் பஸ் இல்லாமல் காத்திருப்பதையும், பெரும்பாலானவர்கள் தனியார் பஸ்களைப் பயன்படுத்துவதையும் அவதானிக்க முடிகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்றுமுன்தினம் (22) இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச. பஸ்ஸின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் கல்கமுவ சாலை இ.போ.ச. சாலை ஊழியர்களால் தலாதகம எனும் பகுதியில் தாக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தாக்குதலை நடத்திய ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரியே இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ். சாலை ஊழியர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Post a Comment