தற்பொழுது யாழ்ப்பாணத்தில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பல கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள்
ஆனபடியினால் இயன்ற அளவு அரசு அதிபரோடு இணைந்து அவரின் கீழ் எரிபொருளை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிப்புக்குரிய ஒழுங்கமைப்பினை மேற்கொண்டுள்ளோம் என யாழ் கட்டளை தளபதி தன்னிடம் தெரிவித்ததாகவும் மேலும்
வடபகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி எதுவும் எமக்கு கிடைக்கவில்லை இருந்தும் வறிய குடும்பங்களுக்கான உதவிகள் செய்து கொண்டிருக்கின்றோம்
அத்தோடு எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக போக்குவரத்துஸ்தம்பிதம் அடைந்துள்ளது கொழும்பு மற்றும் தூர இடங்களுக்கு போய் வருவது கஷ்டமாகவுள்ளது
முக்கியமாக சுகாதார பிரிவினருக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பினையும் கொடுத்து தயாராக இருக்கின்றோம் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுடைய பணியினை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு இராணுவம் ஒத்துழைப்பினை வழங்கும் என யாழ் மாவட்ட ராணுவ கட்டட தளபதி தன்னிடம் தெரிவித்ததாக யாழ் ஆயர் தெரிவித்தார்
Post a Comment