'நாட்டின் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை வெற்றிக் கொள்ளும் சிறந்த திட்டத்தை செயற்படுத்தும் சவாலை ஏற்கிறோம். நாட் டு மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே டலஸ் அழகப்பெருமாவுடன் ஒன்றிணைந்துள்ளோம்' என திர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவுக்கான பெயர் பிரேரிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பாராளுமன்ற வளாகத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
'நாட்டு மக்களுக்காகவே நான் தியாகம் செய்துள்ளேன். மக்கள் எதிர்பார்க்கும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு,அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக சிறந்த அரச நிர்வாகம்,அரச நிர்வாகத்தில் சிவில் மக்கள் பங்குப்பற்றும் அரச சபை உருவாக்கம் ஆகியவற்றை செயற்படுத்த ஒன்றிணைந்துள்ளோம்' எனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment