அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் இன்று காலை 11மணி வரை யாழ்ப்பாணம் ஐஓசி எரிபொருள் நிரப்புநிலையத்தில் வரிசையில் நிற்க வேண்டாம் என யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்
அத்தியாசிய சேவையில் ஈடுபடுவோரில் ஒரு பகுதியினருக்கான பெற்றோல் விநியோகம் இடம்பெறவுள்ளது. எனினும் அத்தியாவசிய சேவைகளுக்கான விநியோகம் காலை 11 மணி முதல் விநியோகிப்பதற்குரிய ஏற்பாடுகளை யாழ் மாவட்ட செயலகம் இராணுவத்தினருடன் இணைந்து முன்னெடுத்துள்ளது
எனவே இன்று காலை 11மணி வரையில் ஏற்கனவே யாழ் மாவட்ட செயலத்தினால் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட நடைமுறைக்கு அமைவாக பொதுமக்களுக்கான எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஒரு தொகுதியினருக்கான எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அறிவித்துள்ளார்
எனவே காலை 11மணி வரை அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் வரிசைகளில் வந்து நிற்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும்,இதேவேளை மாவட்ட செயலகத்தில் தமது எரிபொருள் பெறுவதற்கான கோரிக்கையை முன் வைத்தோரில் ஒரு பகுதியினருக்கு முன்னுரிமை அடிப்படையில் அவர்களுடைய கோரிக்கை கடிதத்தில் குறிக்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு இன்று காலை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் அறிவிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்குரிய எரிபொருள் டோக்கன் வழங்கப்பட்டு எரிபொருள்விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது.
டோக்கன் பெற்றுக் கொள்ளாத அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் எவருக்கும் இன்றைய தினம் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment