காரைநகரில் இடம்பெற்ற வீதி மறிப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது, வாகனங்களின் போக்குவரத்துக்கள் வழமைக்கு திரும்பியுள்ளன.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுடன் பிரதேச சபை மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் கலந்துரையாடி, வரிசையில் உள்ள வாகனங்களின் இலக்கங்களைப் பதிவு செய்து அவர்களை அனுப்புவது எனவும் பம்பி திருத்தப்பட்ட பின்னர் உரிய ஒழுங்கின் அடிப்படையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வழிவகை செய்வது எனவும் உறுதியளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
தற்போது, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களால் வரிசையில் உள்ள வாகனங்களின் இலக்கங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
Post a Comment