நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்தார்.
எரிபொருள் பிரச்சினை மற்றும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் அலுவலகத்தில் இன்று (23) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.
கல்வி, மீன்பிடி, சுற்றுலா, விவசாயம் மற்றும் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளுக்கு வழக்கமான மற்றும் விரைவான எரிபொருள் விநியோகம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment