அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருப்போருக்கு குடிநீர் வழங்கும் முகமாக இராணுவத்தினரால் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நீர் தாங்கி ஒன்று வைக்கப்பட்டு , அதனூடாக குடிநீர் வழங்கி வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்
தற்போது கடுமையான வெய்யில் காலமாக இருப்பதனால் வரிசையில் காத்திருப்பவர்கள் தாகத்துடனையே அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமைகள் காணப்பட்டமையால் , வரிசையில் காத்திருப்போருக்கு குடிநீர் வழங்கும் முகமாக இராணுவத்தினர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நீர் தாங்கியை வைத்துள்ளனர்.
Post a Comment