எரிபொருள் நெருக்கடி மற்றம் போக்குவரத்து சிக்கல் காரணமாக தொடர் விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
வாரத்தில் மூன்று நாட்கள் (திங்கள், செவ்வாய், வியாழன்) மட்டுமே பாடசாலைகளை நடத்தவும், ஏனைய இரண்டு நாட்களில் (புதன், வெள்ளி) இணையவழி கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை தொடரவும் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
எனினும், தற்போது தென் மாகாணத்துக்கு உட்பட அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளையும் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை வாரத்தில் 5 நாட்களிலும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாண கல்விச் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Post a Comment