முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுப் பிரிவின் ஆதரவுடன் மாவட்ட குத்துச் சண்டை சங்கத்தினால் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ள குத்துச்சண்டை பயிற்சியினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் .க.விமலநாதன் இன்று காலை 10.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு பயிற்சி நிலையத்தில் ஆரம்பித்து வைத்தார்.
இங்கு கருத்துரை வழங்கிய மாவட்ட செயலாளர் ” முல்லைத்தீவு மாவட்டம் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது மக்கள் தொகையில் குறைவாக இருப்பினும் வடமாகாணத்தில் விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் ஒருங்கிணைந்த விளையாட்டுப் போட்டிகளில் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம் நிலையினைப் பெற்றுள்ளமை அனைவரையும் பெருமையடைய வைக்கின்றது.
விளையாட்டினைப் போன்று கல்வியிலும் அனைவரும் முன்னுக்குவர வேண்டும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து மாவட்ட குத்துசண்டை சங்கத்தின் பிரதம பயிற்சி ஆசிரியர் நாகேந்திரன் (வள்ளுவன் மாஸ்ரர் ) மாணவர்களுக்கு முதல் நாள் பயிற்சியினை வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.குணபாலன் ,மாவட்ட விளையாட்டு பயிற்றுனர் இ.சகிதரசீலன், முல்லைத்தீவு மாவட்ட குத்துச் சண்டை சங்கத்தின் தலைவர் மற்றும் சங்க உறுப்பினர்கள், குத்துச்சண்டை வீர வீராங்கனைகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
Post a Comment