நாட்டின் எட்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பாராளுமன்ற வாக்குகளின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சவால்களை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்திலேயே ரணில் விக்கிரமசிங்க அரச நிர்வாகத்தை பொறுப்பேற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை மக்களின் செயற்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் ஆசீர்வாதத்துடன் இளம் செயற்பாட்டாளர்களின் முயற்சியின் பலனாகவே இதற்கு முன்னர் காணப்பட்ட செயற்திறனற்ற நிர்வாகம் கவிழ்க்கப்பட்டது என்பதனை ரணில் விக்ரமசிங்க மறந்துவிடக்கூடாது எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து இலங்கையர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டுமாயின், அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களை பரந்த நிர்வாக கட்டமைப்பிற்குள், அரச நிர்வாகத்துடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என தான் நம்புவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.
அதற்காக தற்போதைய நிர்வாக முறைக்கு அப்பாற்சென்று புதிய நிறுவனங்கள் மற்றும் நிர்வாக முறையை உருவாக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment