ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தற்போது இலங்கையில் இல்லை எனவும் எதிர்வரும் புதன்கிழமைக்குள் அவர் நாடு திரும்புவார் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
BBC செய்தி சேவைக்கு பேட்டியளித்த சபாநாயகர், ஜனாதிபதி தற்போது இலங்கைக்கு அண்மித்த நாடு ஒன்றில் தங்கியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ கடற்படையின் கப்பலில் இருந்ததை உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தங்களுக்கு உறுதிப்படுத்தியதாக பிபிசி இணையதளம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி இந்தியா சென்றாரா என்று சபாநாயகரிடம் BBC செய்தியாளர் கேள்வியெழுப்பியபோது,
இதற்குப் பதிலளித்த சபாநாயகர், பாதுகாப்புக் காரணங்களுக்காக இது தொடர்பில் மேலும் எதனையும் தெளிவுபடுத்தவும் குறிப்பிடவும் முடியாது எனத் தெரிவித்தார்.
Post a Comment